ரூ. 2.59 கோடி வேளாண் விளை பொருட்கள் வர்த்தகம்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் ரூ. 2.59 கோடி வேளாண் விளை பொருட்கள் வர்த்தகம் நடந்தது.;
Update: 2024-02-14 08:36 GMT
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு நெல், உளுந்து, மக்காச்சோளம் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. எனினும் ஏலத்திற்கு அனுமதிப்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உளுந்துக்கு 300 லாட், நெல்லுக்கு ஆயிரம் லாட் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக உளுந்து விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி உளுந்து ஒரு மூட்டை சராசரி விலையாக ரூ. 9 ஆயிரத்து 550க்கும், நெல் 2,030க் கும் கொள்முதல் செய்யப்பட்டது. பனிப்பயறு, தட்டைப்பயறு என மொத்தம் 590.32 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலம் ரூ. 2.59 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.