ஸ்ரீவில்லிபுத்தூரில் மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது சேதம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

Update: 2024-02-01 12:48 GMT
மழையால் சேதமடைந்த வீடு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அதிகாலை முதல் பெய்த மிதமான மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் வளிமண்டலத்தில் கிழக்கு திசையில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக இரண்டு நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அதிகாலை முதலே தொடர் மழையானது மிதமாக பெய்து வருகிறது.

இதனால் கீழ ரதவீதி பகுதியில் அமைந்துள்ள ஜெயராம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ஜெயராம் மற்றும் அவரது மனைவி வீட்டின் உட்புறம் இருந்ததால் அவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

மேலும் தொடர்ந்து சாரல் மழையானது பெய்து கொண்டிருப்பதால் மாணவ மாணவிகள் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர் மழைதொடர்ந்து சாரல் மழையாக பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News