காவேரிப்பட்டினத்தில் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினத்தை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
Update: 2024-03-16 15:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை முன்னிட்டு தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் சுமார் 200 பேர் இணைந்து தென் பெண்ணை ஆற்றில் இருந்த நெகிழிப்பை கழிவுகளை அகற்றினார்கள் சுமார் 600 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
தென் பெண்ணை ஆற்றை தூய்மைப்படுத்திய தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் தேசிய பசுமை படை மாணவர்களை தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.