கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி பள்ளி ஆண்டு விழா

Update: 2023-11-28 06:23 GMT
பரிசு வழங்கல்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான  பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. பள்ளி தாளாளர் துளசிதாஸ் தலைமை தாங்கி கொடியேற்றினார். பள்ளி முதல்வர் நாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் ஐ எஸ் ஆர் ஓ திரவ இயக்கமைய திட்ட இயக்குனர் வி. நாராயணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, சிறப்புரையாற்றி, பரிசுகள் வழங்கினார்.  இந்த விழாவில் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவர் முருகன்,   கல்வி பணி கழக தலைவர் குமார்,    பொருளாளர் சவுந்திரராஜன், துணை தலைவர் முருகன், பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
Tags:    

Similar News