ராசிபுரத்தில் வழக்குரைஞர்கள் சங்கக்கூட்டம்
Update: 2023-11-24 08:23 GMT
வழக்குரைஞர்கள் சங்கக்கூட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வழக்குரைஞர்கள் சங்கக்கூட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்துறை அலுவலகத்திற்கு ஒட்டுநர் உரிமம் புதுப்பிக்கச் சென்ற சங்கத்தின் உறுப்பினர் வழக்குரைஞர் குமார் அவமதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் இடைதரகர்களின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளதாகவும், இதனை தமிழக அரசும், உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை ஏழு நாட்களுக்குள் எடுக்கவில்லையெனில் அடுத்தக்கட்ட போராட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடு்ககப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் வழக்குரைஞர்கள் பலர் பங்கேற்றனர்.