காண்ட்ராக்டரை அடித்துக் கொண்டவருக்கு ஆயுள் தண்டனை

கொட்டாரம் அச்சங்குளத்தில் முன்விரோதத்தில் கான்டிராக்டரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-01-24 06:12 GMT
பைல் படம்

குமரி மாவட்டம் கொட்டாரம் அச்சங்குளம் பகுதி சேர்ந்தவர் பாலமுருகன் (43).  செங்கல் சூளை வேலைக்கு தொழிலாளர்களை அனுப்பும் கான்ட்ராக்டர் பணியை மேற்கொண்டு வந்தார்.  மேலும் அந்தப் பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவில் நிர்வாக பொறுப்பில் இருந்து வந்தார்.   இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சகோதரர்களான மரிய சுபாஷ், சுயம்புலிங்கம், சந்திரசேகர் மற்றும் இயேசு பாலன் (33) ஆகியோருக்கு மிடைய முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில் தொழில் ரீதியாகவும் அவர்களுக்கிடையே பிரச்சனை நீடித்தது.      இந்த நிலையில் கடந்த 23- 8 - 2012 இரவு 7 மணிக்கு பாலமுருகன் கொட்டாரம் பெரிய விளை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு நடந்து சென்ற அப்போது அங்கு வந்த சகோதரர்கள் நான்கு பேரும் வழிமறித்து பாலமுருகனை கம்பு மற்றும் கல்லால் பயங்கரமாக தாக்கினர்.    இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு செய்து நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மாவட்ட விரைவு அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.    ஆனால் வழங்கு விசாரணையின் போது மரிய சுபாஷ், சுயம்புலிங்கம், சந்திரசேகர் ஆகிய மூன்று பேரும் இறந்து விட்டனர். தற்போது இயேசு பாலன் மட்டும் உயிருடன் உள்ளார். இதை அடுத்து விசாரணையில் அவர் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இயேசு பாலனுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை என தீர்ப்பு கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News