புதுமாப்பிள்ளையை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
அரியலூர் அருகே தழுதாமைமேடு பகுதியில் முன் விரோதத்தில் புது மாப்பிளையை வெட்டிக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார்.
Update: 2024-02-01 08:28 GMT
அரியலூர் மாவட்டம் தழுதாமைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த திருமணமாகி சில நாட்களே ஆன பவித்ரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பவித்ரன் வீட்டிற்கு சென்ற ஜெயமணி தான் வைத்திருந்த அரிவாளால் பவித்ரனை வெட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பவித்ரனை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் 24.04.2023 அன்று பவித்ரன் உயிர் இழந்தார். இதனையடுத்து மீன்சுருட்டி போலீசார் ஜெயமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்க கொண்டு செல்லபட்டார்.