நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்தவர் தலையை துண்டித்து கொலை

பட்டப்பகலில் நடந்த கொடூர கொலை குறித்து போலீசார் விசாரணை;

Update: 2024-02-19 13:52 GMT

மதுரை அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்தவர் தலையை துண்டித்து கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே கடந்த 2012ஆம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்று விட்டு திரும்பிச் செல்லும்போது, குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய 11 பேர் மீதான வழக்கு பாதுகாப்பு காரணத்திற்காக, மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக குற்றவாளி ராமர் என்ற ராமகிருஷ்ணன் (A1) கார்த்தி என்பவரை அழைத்து வந்தார். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, ஊர் திரும்ப இருசக்கர வாகனத்தில் கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது, அரவக்குறிச்சி அடுத்த தேரப்பாடி பிரிவு சாலை அருகே காரில் வந்த ஒரு மர்ம கும்பல், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் கொடூரமாக அறிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

Advertisement

இந்த தாக்குதலில் ராமர் என்ற ராமகிருஷ்ணன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். கார்த்தி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரூரில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த குற்றவாளி ஒருவர் கரூர் மாவட்ட எல்லையில் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News