மஹாலெட்சுமி குபேர மஹா யாகம்
நாகை மாவட்டம், தேவூர் தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் மஹாலெட்சுமி குபேர மஹா யாகம் நடைப்பெற்றது.
கி.பி. 4ம் நூற்றாண்டில் கோச்சங்க சோழனால் கட்டப்பட்ட 72 மாத கோயிலில் தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில் ஒன்றாகும் கோயிலில் கோயில் கட்டும் பொழுது தரையில் இருந்து சுமார் 15 அடி உயரத்தில் கட்டப்பட்டகோயில் கட்டிடத்தில் வைக்கப்பட்ட வெள்வாழை என்கின்ற வாழைமரம் 16 நூற்றாண்டுகளாக வாழையடி வாழையாக இன்றும் தலவிரிச்சமாக இன்றும் இருந்து வருகிறது.
தேவபுரீஸ்வரர் குபேரன் வழிபட்டு தேவர் பட்டம் பெற்றகுரு ஸ்தலம் ஆகும். இந்த கோயிலி மஹாலெட்சுமி குபேர மஹாயாகம நேற்று நடைபெற்றது மஹாலெட்சுமி குபேர யாகத்தின் பலன்களாக குபேர பூஜை மஹா யாகத்தில் கலந்து கொன்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும். தடையில்லா கல்வியையும், நீண்ட ஆயுளையும் பெறலாம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடந்தேறும், கு ழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும, இழந்த பதவியை பெறலாம், செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை பெறலாம் என்ற ஏராளமானோர் இந்த யாகத்தில் கலந்து கொள்வார்கள்.
இந்த மகாலெட்சுமி குபேர யாகம் வினாயகர் பூஜையுடன் தொடங்கி, கலச பூஜையும், அதனை தொடர்ந்து நவக்கிரஹ பூஜை, லெட்சுமி பூஜை, கோ பூஜை. குபேர பூஜையும் ஸ்ரீமஹாலெட்சுமி குபேர மஹாயாகமும், வஸோத்தாரா ஹோமமும் நடைபெற்று மகாஅபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்று மாலெட்சுமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமா பக்கர்கள் கலந்து கொண்டனர்அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராம வாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.