ஆசை காட்டி ரூ.1.25 கோடி சுருட்டியவர் கைது!
கோட்டைப்பட்டினத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நபர் ஒருவர் இளைஞரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.25 கோடி கொள்ளையடித்த சம்பவம் அதிறவலையை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்பு படம்
கோப்பு படம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்தவர முகமது பயாஸ் (42). இவரிடம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சோழபுர கிராமத்தை சேர்ந்த முகமது சுஹைல் (32) என்பவர் தன்னை ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யும் பணியினை இருவரும் சேர்ந்து செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
இதற்காக அவரிடம் இருந்து ரூபாய் 85 லட்சத்தை வாங்கிக் கொண்டார்.ஆனால் கூறியபடி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யும் பணியை வாங்கித் தரவில்லை ஏமாற்றம் அடைந்த முகமது பயாஸ் பணத்தை திருப்பி கேட்ட பொழுது தன்னிடம் இப்போது பணம் இல்லை மேலும் ரூபாய் 50 லட்சம் வழங்கினால் ஏல சீட்டில் பணம் வந்ததும் திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி முகம்மது பாயாசம் ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார். இதன்பின் ரூபாய் 10 லட்சத்தை மட்டும் முகம்மது சுகைல் திருப்பி அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது பயாஸ் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசீர் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான முகமது சுகைலை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பொங்கல் தொகுப்பு அரசின் அனுமதியை பெற்றதாக கூறி முகமது பயாசை ஏமாற்றியதோடு அரசின் அனுமதி கிடைத்ததாக நம்பி 2022 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கான வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்களை பாக்கெட் செய்து வைத்திருந்ததும், ஆர்டர் கிடைக்காமல் முகமது சுஹைல் ஏமாற்றம் அடைந்ததும், இதே போல் தமிழகத்தில் பல பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி முகமது சுகேல் மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து தற்பொழுது சிறையில் அடைத்துள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு விநியோக பணிக்காக ஆசை காட்டி 1.25 கோடி சுருட்டிய சம்பவம் புதுக்கோட்டை, மட்டுமல்லாது கும்பகோணத்தை சேர்ந்த சோழபுரம் கிராமம் மக்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.