மகளிர் தினம் முன்னிட்டு குழந்தைகள் அமைப்பு சார்பில் மினி மாரத்தான்
மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட நாரி சக்தி பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.
மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட நாரி சக்தி பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இன்று மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.மகளிர் அணி மாவட்ட தலைவி சத்தியஸ்ரீ ரவி தலைமை வகித்தார்.பா.ஜ.மாநில செயலாளர் மீனாதேவ், மகளிர் அணி மாநில தலைவி உமாரதி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., காந்தி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தொடங்கி மாரத்தான் ஓட்டம் விவேகானந்தா கல்லூரியில் நிறைவுற்றது. இதில்,பா.ஜ.மாவட்ட பொருளாளர் முத்துராமன், மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் அனுஜா, மாவட்டச் செயலாளர் ராஜஸ்ரீ, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், ஒன்றிய தலைவர் சுயம்பு,ஒன்றிய துணைத் தலைவர் ராஜன், கோவளம் ஊராட்சி பா.ஜ.தலைவர் ராம தாணுலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.