வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சா் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மூலப்பள்ளிபட்டி, நாரைகிணறு மற்றும் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சியில் மினரல் வாட்டர் பிளான்ட் பூமி பூஜை, ஆயில்பட்டி மற்றும் நாவல்பட்டி ஊராட்சி மற்றும் கார்கூடல்பட்டி ஊராட்சி சின்னமதுரையில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, மங்களபுரம் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு பூமி பூஜை என ரு. 4,2,85,000 மதிப்பிலான பணிகளுக்கான பூமி பூஜையும், கார்கூடல்பட்டி கும்பாளா பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணி நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் கே.பி.இராமசுவாமி, மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலச்சந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அந்தந்த பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள், திமுக முன்னோடிகள், சார்பு அணியினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.