முடியனுார் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
முடியனுார் திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் 61 அடி உயர தேரை பக்தர்கள் தோளில் துாக்கி ஊர்வலமாக சென்றனர்.
Update: 2024-05-27 02:27 GMT
முடியனுார் திரவுபதி அம்மன் கோவிலில், துாக்குத்தேர் திருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் சர்வ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. கடந்த 23ம் தேதி அர்ஜூனன், பாஞ்சாலி அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் அரவான் களபலி, காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 61 அடி உயர தேரில் பஞ்சபாண்டவர்களை வைத்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் சுமந்து முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்றனர். பின்னர் தீமிதி திருவிழாவும் அதைத்தொடர்ந்து குழந்தைகளை ஊஞ்சலில் துாக்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.