வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-14 04:28 GMT

ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 01.01.2024 முதல் 31.03.2024 வரையிலான காலாண்டிற்கு 31.12.2023 அன்றைய தேதியில், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பள்ளியிறுதி வகுப்பு தோல்வி / பத்தாம் வகுப்பு தேர்ச்சி / பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பொது பிரிவினருக்கும் மேற்கண்ட கல்வித்தகுதிகளை பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தகுதியுடையவராவர்.

வேலைவாய்ப்பற்ற பயன்பெறுவோர்கள் இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1.ஆண்டு வருமானம் ரூ.72,000/- (பொதுவானவர்களுக்கு) இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு கிடையாது. 2.வயது வரம்பு தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு -45 வயதுக்குள் இருத்தல்வேண்டும். இதர வகுப்பினர்களுக்கு 40 வயதுக்குள் இருத்தல்வேண்டும். 3.உதவித்தொகை பெற விரும்புவோர் தினசரி பள்ளி / கல்லூரி சென்று பயிலும் மாணவராக இருத்தல் கூடாது. 4.உதவித்தொகை பெற விரும்புவோர் அரசு அல்லது தனியார் துறையிலோ பணிபுரிபவராக இருத்தல் கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியுள்ள மனுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள மூலம் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தும் அல்லது அலுவலக வேலை நாட்களில் அலுவலத்திலும் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். 2023-24-في ஏற்கனவே. உதவி பெற்றுவரு பயன்தாரர்கள் ஆண்டிற்கான சுயஉறுதி மொழி ஆவணங்களை ஆகஸ்ட்-2024-க்குள் அளிக்கும்படி காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு பயிற்சி துறை மூலமாக வேலையளிப்போர்களையும். வேலை நாடுநர்களையும் இணைக்கும் வகையில் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள "Tamilnadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in न இணையத்தளத்தில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற பதிவு செய்து பயன்பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News