லாரி மோதியதில் முதியவர் பலி
ஆலங்குடி அருகே லாரி மோதியதில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-03 14:48 GMT
பலி
ஆலங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்ற முதியவர் லாரி மோதி உயிரிழந்தார். ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். சுப்பிரமணியன் (82). இவர் இருசக்கர வாகனத்தில் நெடுவாசல் கடைவீதிக்குச் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தார். இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.