பைக் மீது புல்லட் பைக் மோதிய விபத்தில் முதியவர் பலி
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது புல்லட் பைக் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-06-09 07:08 GMT
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின் மகன் அண்டோ ரொட்டிகோ (62). இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த புல்லட் இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த அக்தர் வாஸ் மகன் அஸ்வந்த் (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.