கிருஷ்ணகிரியில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சி !
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான பகுதிநேர கிராமிய கலை பயிற்சிகள் 12.07.2024 முதல் துவங்க உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தகவல்.
By : King 24x7 Angel
Update: 2024-07-09 04:58 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான பகுதிநேர கிராமிய கலை பயிற்சிகள் 12.07.2024 முதல் துவங்க உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தகவல். தமிழக அரசின் கலைப்பண்பாட்டு துறையின் கீழ், வருகின்ற 12. 07. 2024 முதல் தமிழகத்தில் 25 மையங்களில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சி மையம் செயல்பட உள்ளது. இதில் ஒரு மையமாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சி மையம் செயல்பாட்டிற்கு வருகின்றது. இம்மையத்தில் நாடகம், புரவியாட்டம், பம்பை, சேவையாட்டம், என்ற நான்கு கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றது. வயது வரம்பு 17 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 500/- மட்டுமே. பயிற்சி நேரம் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மட்டும். பயிற்சிகள் ஜூலை 12 முதல் தொடங்க உள்ளது. ஓராண்டு முடிவில் தேர்வு நடத்தப்பட்டு அரசு சான்றிதழ் வழங்கப்படும். எனவே, 2024-2025 ஆம் கல்வியாண்டில் தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், சேர்க்கைக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி பொறுப்பாளர் V.C.சீனிவாசன் (செல்: 9443910396) அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தெரிவித்துள்ளார்.