சேலத்தில் ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு

சேலத்தில் பேருந்தில் கூலி தொழிலாளி மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-21 05:17 GMT

ஓடும் பேருந்தில் தொழிலாளி மரணம் 

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 49). இவர் நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு கூலி வேலைக்காக அரசு பஸ்சில் வந்தார். நள்ளிரவு பஸ் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது பயணிகள் அனைவரும் இறங்கி விட்டனர்.இவர் மட்டும் இறங்கவில்லை.

இதையடுத்து சக பயணிகள் அவரை எழுப்பி உள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்க வில்லை. தகவலின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஓடும் பஸ்சிலேயே அவர் இறந்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News