பொது சுகாதார நிலையத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
சங்ககிரி அருகே பொது சுகாதார நிலையத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2024-03-04 17:20 GMT
பொது சுகாதார நிலையம்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி ஊராட்சி 5வது வார்டு அக்கமாபேட்டை ஆதிதிராவிடர் தெரு பகுதியில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ. 2.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார வளாகம் பராமரிப்பின்றி கதவுகள் பெயர்ந்தும், பீங்கான் உடைந்தும், பெண்கள், குழந்தைகள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு கட்டடத்தின் உறுதித் தன்மை குறைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதோடு குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீரின்றி அப்பகுதி பொதுமக்கள் பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் . மேலும்இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் விஷ பூச்சிகளின் பயத்துடன் திறந்தவெளி பகுதி மக்கள் அச்சத்துடன் செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து ஊராட்சி மன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலனை கரத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுக்களிப்பறையை சீரமைத்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.