மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம் !
மத்திய அரசின் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட விருதுநகர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-12 10:00 GMT
மத்திய அரசின் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட விருதுநகர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த விற்பனை நிலையத்தில் புகழ்பெற்ற ருசிமிகுந்த திண்பண்டமான சேவு விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் வணிகத்தை ஊக்கப்படுத்தவும், கைவினைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகளை பிரபலப்படுத்தும் வகையிலும் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இனிதான பயணத்தை துவங்கும் ரயில் பயணியர், தங்கள் விருப்பமான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு நிலையம், ஒரே பொருள் திட்டம், நாட்டில் உள்ள விளிம்புநிலை சமூக மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் அமைந்துஉள்ளதாகவும்,ஒரு வியாபாரிக்குத் தேவை நல்ல பிளாட்பார்ம்;ஆனால் ரயில்வே பிளாட்பார்மையே வியாபாரிக்கு தந்த மத்திய அரசு பயணிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.