கூட்டுறவுத் துறை சாா்நிலை அலுவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தென்காசி மாவட்ட கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் சாா்நிலை அலுவலா்களுக்கான 2 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-08 02:14 GMT
புத்தாக்கப் பயிற்சி 
 திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தென்காசி கிளையில் நடைபெற்ற இம்முகாமுக்கு, தென்காசி மண்டல இணைப்பதிவாளா் நரசிம்மன் தலைமை வகித்தாா். இம்முகாமில், யோகா, கூட்டுறவு சங்கங்களின் சட்டம்,விதிகள்,தொடா்புடைய இதர சட்டங்கள், கூட்டுறவு சங்கங்களின் இதர செயல்பாடுகள், கூட்டுறவு சங்கங்களின் இன்றைய வளா்ச்சி நிலை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநா் தா்மராஜ், ஓய்வு பெற்ற துணைப் பதிவாளா்கள் செண்பகராஜ், மனோகா், வழக்குரைஞா் கே. லட்சுமணன், யோகா பயிற்சியாளா் வெங்கடேசன் ஆகியோா் பயிற்சியளித்தனா். அனைத்து கூட்டுறவுத்துறை சாா்நிலை அலுவலா்களும் கலந்து கொண்டனா். கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் மாரியப்பன் நன்றி கூறினாா்.
Tags:    

Similar News