பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்த கோரிக்கை
செங்கல்பட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை.
Update: 2024-03-03 14:34 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் ஊராட்சியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சரணாலயத்திற்கு செல்லும் சாலை ஓரம், ஏரி மற்றும் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துஉள்ளனர். இந்த வண்டிகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் புதர் வளர்ந்து காணப்படுகிறது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.