காவலாளி சாவு:  பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது அம்பலம் 

நாகர்கோவில் அருகே காவலாளி அடித்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-04-17 03:15 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை பகுதி சிலோன் காலனியை  சேர்ந்தவர் செல்லம் (60). செக்யூரிட்டியாக வேலைக்கு சென்று வருகிறார். இவரது மனைவி பெயர் ராணி (56). பார்வதிபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் பணியாளராக உள்ளார்.    சம்பவத்தன்று காலை ராணி கோவிலுக்கு சென்று விட்டார். பின்னர் பணி முடிந்து இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.  அப்போது செல்வம் வீட்டின் வெளியே உள்ள கழிவறை பகுதியில் பாறைகளின் அருகில் தலை குப்புற கவிழ்ந்த நிலையில்  ரத்தக்காயங்களுடன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார்.  உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோத்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி சென்று விட்டனர். 

பின்னர் தனியார்  ஆம்புலன்ஸ் மூலம் நள்ளிரவில் ஆசாரிப்பள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளார்.      இது தொடர்பாக இரணியல் போலீசில் ராணி  புகார் செய்தார். போலீஸ்  விசாரணையில்  செல்வம் அன்று  மது போதையில் இருந்ததை பலர் பார்த்து உள்ளனர். ஆகவே போதையில் நிலை தடுமாறு கீழே விழுந்ததில்  இருந்திருக்கலாம்  என்று போலீசார் சந்தேகித்தனர்.இதற்கிடையில் பிரேத பரிசோதனையில் செல்லம், கொலை செய்யப்பட்டு இது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த மெல்வின் என்பவருக்கும் செல்லத்துக்கும் நடந்த தகராறில் மெல்பின் செல்லத்தை அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News