சிறப்பு காப்பீடு திட்ட முகாம்
அரியலூரில் நடந்த காப்பீடு திட்ட முகாமினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
Update: 2023-12-02 15:58 GMT
அரியலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான சிறப்பு காப்பீடு திட்ட பதிவு முகாம் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா நேரில் பார்வையிட்டனர். மேலும் பொதுமக்களுக்கான இடவசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
மனுக்கள் உரிய ஆவணங்களுடன் இணைக்கபட்டு பெறபடுகிறதா என ஆய்வு செய்து, காலதாமதமின்றி மனுக்களை பெற்று விரைவாக பதிவு செய்திட வேண்டும் என வலியுறுத்தபட்டது. இதில் அரசுதுறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.