சிவன் ஆலயத்தில் மார்கழி மாத நிறைவு பூஜை
சங்ககிரி சோமேஸ்வரர் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத நிறைவு பூஜை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்ம் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பஜனை நிறைவு நாள் சிறப்பு பூஜைகள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் அருள்மிகு சோமேஸ்வரர் பக்தர்கள் குழுவினர் சார்பில் கடந்த டிசம்பர் 17ம் தேதி மார்கழி மாதம் 1ம் நாள் தொடங்கி ஜனவரி 14ம் தேதி வரை மார்கழி 29ம் நாள்வரை தினசரி அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிவபுராண பாடல்களை பாடி சுவாமிகளை பக்தர்கள் வழிப்பட்டனர். அதனையடுத்து மார்கழி மாத பஜனை நிறைவு நாளையொட்டி கோயில் முழுவதும் தூய்மை படுத்தப்பட்டு கோயில் வளாகம் முழுவதும் மாவிலை தோரணங்கள், வாழைமரங்கள் கட்டப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது அதனையடுத்து அதிகாலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.