மாணவி விஷம் குடித்து தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே விஷம் குடித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.இது குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2024-05-31 01:52 GMT

காவல் நிலையம் 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிளப்பதாயக்கன அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி,இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்து விட்டு - தர்மபுரியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். கல்லூரி வகுப்பு தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் மாணவி சந்தியா வீட்டில் செல்போன் அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதனை பெற்றோர் கண்டித்ததால் கடந்த 27-ந் தேதி மாணவி விஷம் குடித்து விட்டு குளியலறையில் வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மாணவியை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தர்மபுரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News