அரசு பள்ளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான அறைகலன்கள் வழங்கல்
Update: 2023-11-23 06:10 GMT
அறைகலன்கள் வழங்கல்
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள குண்டுகல் அரசு மேல்நிலை பள்ளிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர் தனது நிதியிலிருந்து வாங்கப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான 44 ஜோடி சேர் டேபிள்களை ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி மாணவர்களுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், தலைமையாசிரியர் பாலச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சித்தேஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினம், அதிமுக முன்னாள் தொகுதி செயலாளர் ராமசந்திரன், அதிமுக ஒன்றிய பொருளாளர் மகாராஜன், ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், நிர்வாகிகள் கோட்டமோட்டுபட்டி தங்கராஜ், சரவணன், திருநாவுக்கரசு, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.