தை அமாவாசை: காய்,கனி, பூக்கள் விலை உயா்வு

தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி காந்தி சந்தையில் காய்,கனிகள் மற்றும் பூக்களின் விலை இன்று உயா்ந்து காணப்பட்டது.மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

Update: 2024-02-09 08:38 GMT

பூ மார்க்கெட் 

ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு மிக்கதாகும். முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வது, கோயில்களுக்கு செல்வது, முன்னோா்களை நினைத்து வழிபடுவது, தீபம் ஏற்றுவது, அன்னதானம் வழங்குவது உள்ளிட்டவற்றில் திரளானோா் ஈடுபடுவா். இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு திருச்சியில் காய்கனிகள் மற்றும் பூக்களின் விலை உயா்ந்து காணப்படுகிறது.

திருச்சி காந்திச்சந்தையில் 150-க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறைக் கடைகள் இருக்கின்றன. கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தேனி, விருதுநகா், திண்டுக்கல், ராமநாதபுரம், கரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும் காய்கனிகள் வந்து சேருகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு,காய்கனிகளின் விலை உயா்ந்து காணப்பட்டது. பீன்ஸின் விலை ரூ. 52 லிருந்து 62 ரூபாயாகவும், அவரையின் விலை 51 ரூபாயாகவும், பீட்ரூட் 44 ரூபாயாகவும், காலிபிளவா் 31 ரூபாயாகவும், முட்டைகோஸ் 25 ரூபாயாகவும், பச்சை மிளகாய் 55 ரூபாய் ஆகவும், கத்திரிக்காய் 31 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

கேரட் ரூ.46 லிருந்து 51 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 48 ல் இருந்து 53 ரூபாயாகவும், குடைமிளகாய் 56 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், முருங்கைக்காய் 115 ரூபாயிலிருந்து 127 ரூபாய் ஆகவும், வெண்டைக்காய் 47 ரூபாயாகவும், தக்காளி 29 ரூபாயிலிருந்து 32 ரூபாய் ஆகவும் விலை உயா்ந்து காணப்படுகிறது. தை அமாவாசை காரணமாக இரண்டு நாட்களுக்கு இந்த விலை ஏற்றம் இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா். மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை இருந்தது. பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகியவற்றின் விலை கிலோ ரூ. ஆயிரம் முதல் ரூ.1500 ஆகவும் இருந்தது. சம்பங்கி, செவ்வந்தி, கனகாம்பரம், உள்ளிட்ட இதர பூக்களின் விலையும் வழக்கத்தைவிட கூடுதலாகவே இருந்தது. , கதம்பம் ஆகியவற்றின் விலையும் உயா்ந்து காணப்பட்டது.

Tags:    

Similar News