தமிழகம் போதை மாநிலமாக காட்சியளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
Update: 2023-12-08 04:19 GMT
ஈரோட்டில் தனியார் கல்லூரியின் நிறுவனரின் நூற்றாண்டையொட்டி அவரின் சிலை திறப்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும் , தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி , தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்.கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் மானியம் , 52 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கி விஞ்ஞான பூர்வமான கல்வி வழங்கியது அதிமுக அரசு. தற்போது மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து உள்ளதாகவும், மாணவ செல்வங்கள் ஒழுக்கத்துடன் இருந்தால் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம் என்ற எடப்பாடி பழனிசாமி தமிழகம் போதை மாநிலமாக காட்சியளிக்கிறது என்றும் மாணவர்கள் அதற்கு அடிமையாக்க்கூடாது என்றும் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.