தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில் நடந்த தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2023-12-27 12:07 GMT

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவானது கடந்த 18.12.2023 முதல் 27.12.2023 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நிறைவு நாளான இன்று தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியானது, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பேரணியில், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், சிறு வணிக கடைகள் ஆகியவைகள் தங்கள் நிறுவனத்தின் பெயர் பலகையை தமிழில் அமைக்க வேண்டும் எனவும், தமிழின் சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்தி சென்றனர். இப்பேரணியானது, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலை பள்ளியில் நிறைவடைந்தது.

இப்பேரணியில், ஞானாம்பிகை அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீர்காழி பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீர்காழி விவேகானந்தா மகளிர் கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 200-மாணவ, மாணவிகள்; பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஜோதிலெட்சுமி, வர்த்தக சங்கத்தலைவர் மதியழகன், திருக்குறள் பேரவை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் இராமச்சந்திரன் மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News