தரங்கம்பாடி சம்பா நெற்பயிர்கள் நாசம் - எம்எல்ஏ நிவேதா முருகன் ஆய்வு
தரங்கம்பாடியை அடுத்த கொடைவிளாகம் கிராமத்தில் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நாசம் - எம்எல்ஏ நிவேதா முருகன் ஆய்வு;
By : King 24x7 Website
Update: 2024-01-09 06:21 GMT
தரங்கம்பாடியை அடுத்த கொடைவிளாகம் கிராமத்தில் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நாசம் - எம்எல்ஏ நிவேதா முருகன் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தரங்கம்பாடி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக தரங்கம்பாடியை அடுத்த கொடைவிளாகம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள அறுவடைக்கு தயாராக இருந்த கதிர் முற்றிய நெற்பயிர்கள் வயலோடு வயலாக சாய்ந்துள்ளது. இந்நிலையில், பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளின் தண்ணீர் கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட பயிர்களை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் வயலில் இறங்கி ஆய்வு செய்தார். இதுகுறித்து இப்பகுதி விவசாயி சின்னதுரை கூறுகையில், அறுவடை செய்ய வேண்டிய தருணத்தில் இருந்த பயிர்களை அறுவடை செய்ய அறுவடை இயந்திரம் வயலில் வந்து இறங்கிய நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய மழையின் காரணமாக அறுவடை இயந்திரம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மூன்று நாளாக பெய்து வரும் மழையால் வயலில் சாய்ந்த பயிர்கள் 50 சதவீதத்திற்கும் மேலாக இதுவரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடர்ந்து நீடித்தால் பயிர்கள் முளைத்து விடும் அபாயம் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.