நாட்டு சாராயம் விற்க முயன்ற வாலிபர் கைது
திருவட்டாறு அருகே நாட்டு சாராயம் விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-06-10 05:07 GMT
சாராயம் விற்பனை செய்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் போலீசார் திருவரம்பு பகுதி வழியாக ரோந்து பணியில் இருக்கும் போது, திருவரம்பு பாலம் அருகில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளார். போலீசார் அவரை மடக்கி பிடித்த போது அவரிடம் விஷ வாடை வீசிய 1/2 லிட்டர் நாட்டு சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவரம்பு, பூவன்கனாவிளை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சாராயம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்