பைக் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர்கள் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியில் பைக் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-01 04:44 GMT
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் நாயர் மகன் மணி கண்டன். இவரும், அடைக்காக்குழி பிராகோடு பகுதியை சேர்ந்த மகன் மார் பைக்கில் சதீஷ்குமார் அனீஷ்கு இருவரும் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது கல்லுவெட்டான் குழி பகுதியில் வைத்து எதிரே வேகமாக வந்த மினி டெம்போ இவர்கள் சென்ற பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், தூக்கி வீசப் பட்டு பலத்த காயம் அடைந்த இருவரும் மார்த்தாண்டம் தனி யார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அனீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.