நெல்லையில் மக்களுக்கு இரண்டாவது நாளாக நீர்மோர் வழங்கிய மேயர்
நெல்லையில் மக்களுக்கு இரண்டாவது நாளாக மேயர் நீர்மோர் வழங்கினார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 09:35 GMT
திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதை முன்னிட்டு பொதுமக்களின் தண்ணீர் தாகத்தை தணிக்கும் வகையில் நேற்று நெல்லையப்பர் கோவில் அருகே மாநகராட்சி மேயர் சரவணன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (மே 4) அக்னி நட்சத்திரம் தொடங்கியதை தொடர்ந்து இரண்டாவது நாளாக தண்ணீர் பந்தலில் மேயர் சரவணன் 2 மணி நேரத்திற்கும் மேலாக நின்று பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.