மகளிர் கோ-கோ விளையாட்டு போட்டிகள் வரும் 26 ஆம் தேதி தொடக்கம்
மகளிர் கோ-கோ விளையாட்டு போட்டிகள் வரும் 26 ஆம் தேதி தொடக்கம்
Update: 2023-12-23 09:49 GMT
திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கான மகளிர் கோகோ விளையாட்டு போட்டிகள் வரும் 26 ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் 75 பல்கலைக்கழகத்திலிருந்து 900 முதல் 1000 வரை கோகோ விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்பார்கள். இந்த போட்டிகளை நடத்துவதற்காக பல்கலைக்கழகத்தில் நான்கு சிறப்பு கோகோ மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மைதானத்தில் ஒரே நாளில் சுமார் எட்டு போட்டிகள் நடைபெறும் .நான்கு மைதானங்களில் ஒரே நாளில் சுமார் 32 போட்டிகள் நடைபெற உள்ளது .ஐந்து நாட்களில் மொத்தம் 76 போட்டிகள் நடைபெறும். நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற அணிகள் லீக் சுற்றுக்கு முன்னேறுவார்கள். அதுமட்டுமின்றி லீக் சுற்றில் முன்னேறுபவர்கள் தேசிய அளவில் நடக்கும் கோகோ போட்டிகளுக்கு தேர்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.