வ‌ரைய‌டி அருகே அர‌சு த‌ரிசு தீ பற்றி எரிவதால் பரபரப்பு

கொடைக்கான‌ல் மேல் ம‌லைக்கிராம‌மான‌ ம‌ன்ன‌வ‌னூர் கிராமத்தில் பிர‌தான‌ சாலையில் வ‌ரைய‌டி அருகே உள்ள‌ அர‌சு த‌ரிசு ம‌ற்றும் த‌னியார் வ‌ருவாய் நில‌த்தில் தீப்பற்றி எரிந்து வருகிறது.

Update: 2024-03-10 08:48 GMT

பற்றி எரியும் தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பகல் வேளைக‌ளில் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ வெப்பம் அதிக‌ரித்து காண‌ப்ப‌டுவதால் செடி,கொடிகள்,புல்வெளிகள், புத‌ர்க‌ள் காய்ந்தும் கருகியும் உள்ளன,

இதன் காரணமாக கடந்த சில தினங்களாக மலைப்பகுதிகளில் அரசு வருவாய் நிலம்,தனியார் தோட்ட பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் அவ்வப்போது தீ பற்றி எரிந்து வருவ‌து வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கொடைக்கான‌ல் மேல்ம‌லைகிராம‌மான‌ ம‌ன்ன‌வ‌னூர் பிர‌தான‌ ம‌லைச்சாலையில் வ‌ரைய‌டி அருகே உள்ள‌ அர‌சு த‌ரிசு நிலப்ப‌குதிக‌ளிலும் அருகே உள்ள‌ த‌னியார் தோட்ட‌ ப‌குதிக‌ளிலும் பல ஏக்கர் பரப்பளவில் காய்ந்து இருந்த புத‌ர் ப‌குதிக‌ளிலும்,

புல்வெளிக‌ளிலும்  திடீரென‌ பிற்ப‌க‌ல் வேளை முத‌ல் தீ பற்றி எரிய தொடங்கியது, காற்றின் வேகம் காரணமாக தீ மளமள வென கொழுந்து விட்டு எரிந்து ப‌ர‌வி வருகிறது, மேலும் அருகே உள்ள் ம‌ன்ன‌வ‌னூர் வ‌ன‌ப்பகுதிக்குள் தீ பரவாமல் இருக்க வ‌ன‌த் துறையினர் சுமார் ஒரு மணிநேரமாக போராடி தீயை க‌ட்டுப்ப‌டுத்தும் ப‌ணிக‌ளில் தீவிர‌மாக‌ ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர், தீ தொட‌ர்வ‌தால் இந்த பகுதி முழுவ‌தும்  புகைமண்டலமாக காட்சியளிக்கின்ற‌து, மேலும் இந்த‌ப்ப‌குதியில் யாரேனும் தீ வைத்தார்களா அல்லது தீ பற்றிய‌த‌ற்கு உண்டான‌ காரணம் குறித்தும் வ‌ன‌த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இந்த தீயானது மாலை வேளைக்குள் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்ப‌டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக‌ ம‌ன்ன்வ‌னூர் செல்லக்கூடிய‌ பிர‌தான ம‌லைச்சாலையில் வரைய‌டி ப‌குதியில் ம‌ளம‌ள‌வென‌ தீ ப‌ர‌வி வ‌ந்த‌ கார‌ண‌த்தால் இப்ப‌குதி சாலையில் சென்ற‌ சுற்றுலாப்பய‌ணி, ம‌ற்றும் பொதுமக்க‌ளின் வாக‌னங்க‌ள் பாதுகாப்பிற்காக‌ சிறிது நேர‌ம் நிறுத்தப்ப‌ட்டதும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

Tags:    

Similar News