சேலம் மாநகராட்சிக்கு மருந்து கொண்டு செல்லும் வாகனம் வழங்கினர்
சேலம் மாநகராட்சிக்கு மருந்து கொண்டு செல்லும் வாகனம் வழங்கினர்;
By : King 24x7 Website
Update: 2023-12-22 17:31 GMT
சேலம் மாநகராட்சிக்கு மருந்து கொண்டு செல்லும் வாகனம் வழங்கினர்
சேலம் மாநகராட்சியில் உள்ள சுகாதார மையங்களுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் தளவாடப் பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் மருந்து வாகனமும், மேலும் பெடரல் வங்கியின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் 10 எரியூட்டிகள் ஆகியவற்றை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோரிடம் ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் மண்டலத்தலைவர் ராஜூநாயர், பெடரல் வங்கியின் நிலைய மேலாளர் மனு ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் அசோக்குமார், பொது சுகாதார குழுத்தலைவர் சரவணன், துணை இயக்குநர்/ மாநகர நல அலுவலர் யோகானந், கலந்து கொண்டனர்.