திருப்பூரில் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 1.10லட்சம் மோசடி
திருப்பூரில் கிரெடிட் கார்டு மூலம் ரூ. 1.10 லட்சம் மோசடி செய்ததால் பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கிரெடிட் கார்டு மூலம் ரூ.1.10 லட்சம் மோசடி பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை. திருப்பூர் கிரெடிட் கார்டு மூலம் 1. லட்சம் மோசடி செய்ததால் பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூர் மாநகராட்சி நல்லூர் 2- வது வீதி பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவர் சிட்கோ பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி உமா மகேஸ்வரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு பெற்றிருந்தார். இந்நிலையில் கிரெடிட் கார்டை ஒப்படைக்க நினைத்தார். இது தொடர்பாக பேசி வந்தார். இந்நிலையில் வங்கியில் இருந்து பெண் ஒருவர் பேசுவதாக் கூறி பிரகாஷிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பிரகாஷ், அந்த பெண் கேட்டகேள்விகளுக்கு செல்போனில் பதில் அளித்துள்ளார். தொடந்து சொல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வரும் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அவர் கிரெடிட் கார்டு சேவை நிறுத்துவதற்காக அந்த கடவுச்சொல்லை பெண்ணிடம் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தை மதிப்புள்ள பொருட்கள் வாங்கியதாக பிரகாஷின் செல்போனுக்கு குறுந்தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக அவர் வங்கியில் முறையிட்ட போதும் உரிய பதில் இல்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதில் விரக்தி அடைந்த பிரகாஷ், நேற்று விஷம் அருந்தி வீட்டில் மயங்கினார். இதையடுத்து அவரது நிலையை கண்ட பிரகாஷின் தாய் மற்றும் சகோதரர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.