பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வீடு, வீடாக வினியோகம்
சேலத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வீடு, வீடாக வினியோகம் செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 70 ஆயிரத்து 970 அரிசி பெறும் ரேஷன்கார்டுத்தாரர்களுக்கும் மற்றும் 935 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் தற்போது ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ரேஷன்கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, ‘ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நாளை (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க தினமும் 200 முதல் 250 வரையிலான ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.