ஏற்காட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

ஏற்காடு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி போக்குவரத்தை சீர் செய்தனர்.;

Update: 2024-04-21 03:13 GMT

விபத்துக்குள்ளான வேன்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டுக்கு நேற்று காலை வேலூரில் இருந்து 13 பேர் வேனில் சுற்றுலா வந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். இதையடுத்து இரவில் குப்பனூர் வழியாக அதே வேனில் ஊருக்கு மீண்டும் புறப்பட்டனர். கொட்டச்சேடு என்ற பகுதியில் வந்த போது திடீரென வேனில் ஆக்சில் கட்டாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் இந்த வேன் அங்கிருந்த சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் லேசான காயம் அடைந்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக வாழவந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் போலீசார் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News