பாரம்பரிய எருதாட்ட விழா : பொதுமக்கள் கண்டு ரசிப்பு
ஓசூர் அருகே நடந்த பாரம்பரிய எருதாட்ட விழா : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசிப்பு
Update: 2024-03-14 17:40 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கள்ளக்குறுக்கி கிராமத்தில் பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. தோரிப்பள்ளி செட்டிப்பள்ளி ஆகிய கிராம பஞ்சாயத்து பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட இந்த எருதாட்ட விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கூட்டத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட காளைகள் கொம்புகளில் பரிசு பொருள்கள் மற்றும் தடுக்குகளை கட்டிக்கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பிடித்து அடக்கினர். அப்போது காளைகளின் மேல் கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்களையும் தடுக்குகளையும் இளைஞர்கள் அவிழ்த்து சென்றனர். இந்த எருதாட்ட விழாவில் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, பாகலூர், பேரிகை, தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் கிராம பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து கண்டு ரசித்தனர்.