சேலம் மாவட்டத்தில் 15வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
சேலம் மாவட்டத்தில் 15வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள், போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியில் இருந்த சித்தானந்தம், பிரேமா, நல்லதம்பி, ஆரோக்கியநாதன் கென்னடி, கல்யாண்குமார் ஆகிய 5 பேருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டது.
இதேபோல் உதவியாளர் நிலையில் இருந்த 6 பேருக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஊரக வளர்ச்சி துறையில் இளநிலை உதவியாளர், ஊர்நல அலுவலர் நிலை-2, காசாளர், தட்டச்சர் நிலையில் இருந்த 6 பேருக்கு உதவியாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி பிறப்பித்துள்ளார்.