தேதிமுக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு புகழ் அஞ்சலி

புதுக்கோட்டையில் நடந்த மௌன ஊர்வலத்தில் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-08 08:55 GMT
விஜயகாந்திற்கு அஞ்சலி

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புகழ் அஞ்சலி புதுக்கோட்டை மாவட்ட தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது . புதுக்கோட்டை நகர் மன்றத்திலிருந்து புறப்பட்ட மௌன ஊர்வலத்தில் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நகர செயலாளர் பரமஜோதி முன்னிலையில் தேமுதிக நிர்வாகிகள் மட்டுமல்லாது அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓபிஎஸ் அணியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியலை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மௌன ஊர்வலம் அண்ணா சிலை அருகே முடிவடைந்தது . இதன் பின்னர் விஜயகாந்தின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் திரைத்துறையில் மட்டுமல்லாது அரசியலிலும் புகழ் பெற்று விளங்கி நடிகர் திலகம் எம்ஜிஆர் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்ஜிஆருக்கு பிறகு திரை துறையில் அரசியலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு மக்கள் மனதிலும் இடம் பிடித்த தலைவர் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்பதை மாற்று கருத்து கிடையாது.  அரசியலில் இருந்து கொண்டு திரைப்படத்திலும் நடித்து வெற்றி பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் என்று புகழ் அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News