நீர் நிலைகளில் குப்பை கொட்ட வந்த லாரிகள் சிறை பிடிப்பு !
அடையாளம்பட்டு ஊராட்சியில் இருந்து குப்பைகளை இரண்டு ராட்சத லாரியில் ஏற்றி வந்து வயலாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் கொட்ட முற்பட்டுள்ளனர். இதனை நோட்டமிட்ட கிராம மக்கள் லாரியை மடக்கி பிடித்து உடனடியாக வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்து லாரியை ஒப்படைத்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-29 07:37 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பூந்தமல்லி மாங்காடு போன்ற நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால் குப்பைகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் கொட்டி குவித்து வைத்துள்ளனர். இரவு நேரங்களில் மேற்கொண்ட குப்பைகளை காலி மைதானங்கள் நீர்நிலைகள் ஏரி போன்ற பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக கொட்டி வருகின்றனர். அந்த வகையில் அடையாளம்பட்டு ஊராட்சியில் இருந்து குப்பைகளை இரண்டு ராட்சத லாரியில் ஏற்றி வந்து வயலாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் கொட்ட முற்பட்டுள்ளனர். இதனை நோட்டமிட்ட கிராம மக்கள் லாரியை மடக்கி பிடித்து உடனடியாக வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்து லாரியை ஒப்படைத்தனர். குப்பை கொட்ட வந்த லாரியை கிராம மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.