மேட்டூரில் பெண்ணிடம் பணம்,செல்போன் பறித்த இருவர் கைது

Update: 2023-11-26 02:54 GMT

குமார் , ராஜா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் மறவர் பெருங்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது  மனைவி சோலையம்மாள்(40), இவர்களுக்கு கிருத்திகாதேவி, வடிவுக்கரசி, ராஜேஸ்வரி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். ராஜேஸ்வரியைத் தவிர மற்ற இருவருக்கும் திருமணமாகிவிட்டது.  இந்நிலையில் மோஜி என்ற செயலியில் வேலை இருந்தால் தகவல் தரவும் என சோலையம்மாள் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் அய்யம்புதூரை சேர்ந்த  குமார்(33)  இவரது சித்தப்பா மகன் ராஜா (35)  இருவரும் தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும்,மாதம் தோறும் ரூ.17,000 சம்பளமும் உணவும் தங்கு இடமும் வழங்குவதாக கூறியுள்ளனர்.  இதனை உண்மை என்று நம்பிய சோலையம்மாள் கொளத்தூர் வந்து சேர்ந்தார். இவரை குமார் ராஜா இருவரும் தங்களது கிராமத்திற்கு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். நகை பணம் உள்ளதா என்று விசாரித்தவர்கள்  அவரிடம் இருந்த ரொக்கம் ரூ.750 ,ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு விரட்டி விட்டனர். இதுகுறித்து சோலையம்மாள் கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜா மற்றும் குமார் ஆகிய  இருவரையும் கைது செய்து விசாரனை நடத்தி  மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News