வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடி சென்ற இரண்டு நபர் கைது
கீழையூர் அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற இரண்டு பேர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-22 05:07 GMT
வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடி சென்ற இரண்டு நபர் கைது
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பிரதாபராமபுரம் செருதூர் பாலத்தடி பகுதியை சேர்ந்தவர் காத்தான் மகன் வீரமணி தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே உள்ள மேசையில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக வீரமணி கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வீரமணி வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிய பெருங்கடம்பலூர் காலனி தெரு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் காரல் மார்க்ஸ் வயது 34 வெளிபாளையம் சிவன் கோயில் பின்புறம் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் ஐயப்பன் வயது 39 ஆகிய இருவரை போலீசார் பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு கைது செய்தனர்.