காஞ்சிபுரம் அண்ணா பட்டு பூங்காவில் வாலாங்கி சேலை தயாரிக்கும் பணி

காஞ்சிபுரம் அண்ணா பட்டு பூங்காவில் வாலாங்கி சேலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-01-25 16:17 GMT

சேலை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா பட்டு பூங்காவில் நெசவாளர்களுக்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டுப் பூங்காவில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் குமரவேல் என்கின்ற பட்டு நெசவு வடிவமைப்பாளர் மூலம் பிரம்மாண்ட கைத்தறியை அமைத்து அவற்றில் 24 அடி அகலம் கொண்ட இந்தியாவிலேயே முதல்முறையாக தயாரிக்கப்படும் வாலாங்கி சேலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது .

இவை பெரிய வணிக தலங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் மிகப் பெரிய வடிவமைப்பிலான கைத்தறி சேலையாகும். இதுபோன்ற வாலாங்கி சேலை 24 அடி அகலமும் வடிவமைப்புக்கு ஏற்ற மாதிரி அதிகப்படியான நீளமும் கொண்டு தயாரிக்கலாம் என்றும் இவற்றை வடிவமைக்க 5 நெசவாளர்கள் உடன் பணியாளர்கள் நான்கு பேர் மற்றும் மின்சார வடிவமைப்பு பொறியாளர்கள் என குழுக்களாக செயல்பட்டால் மட்டுமே இது போன்ற வாலாங்கி சேலைகளை வடிவமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பயனாளிகள் கேட்கும் வடிவத்தில் வாலாங்கி சேலை காஞ்சிபுரம் பட்டு பூங்காவில் தயார் செய்து தரலாம் என்றும் வடிவமைப்பாளர் குமரவேல் தெரிவித்தார். சராசரியாக கைத்தறி நெசவு செய்து பெண்கள் அணியும் பட்டு ஆறடி கொண்டதாகவும் சேலைகள் 50 இன்ச் அகலமும் 240 இன்ச் நீளமும் கொண்டிருக்கும் இவை குறைந்தது வடிவமைப்பதற்கும் சேலை உற்பத்தி செய்யவும் 15 நாட்களாவது ஆகும்.

ஐந்து நெசவாளர்கள் கொண்டு காலையில் 6:00 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்குள் ஒரே நாளில் பயனாளிகள் விருப்பத்திற்கு ஏற்ப கைத்தறி சேலை முடித்து தர முடியும். இந்த பிரமாண்ட கைத்தறியை வடிவமைக்க மூன்று மாதம் ஆனதாகவும் இவற்றில் ஒரு சில வடிவமைப்பு மற்றும் தொழில் சார்ந்த வடிவமைப்பில் மின்சார மோட்டார் பயன்படுத்தி கைத்தறி நெசவு செய்வதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News