வேதாந்தா அகாடமி பத்திரிக்கையாளர் சந்திப்பு!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் வேதாந்தா அகாடமி சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

Update: 2024-04-25 01:27 GMT

கிராமப்புற ஊரகப்பகுதியில் உள்ள மாணவர்களும்  ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சிகளை பெற்றுக் கொள்வதும் , கல்வி தரத்தை உலக அளவில் உயர்த்துவது முதல் பணியன விமானப்படையில் இருந்து வந்த குரூப் கேப்டன் ஜி எஸ் வொக்ரா திருப்பூரில் தனியார் பள்ளி இயக்குனராக பொறுப்பேற்றக் கொண்ட பின் பேட்டி. திருப்பூர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள வேதந்தா அகாடமி சிபிஎஸ்சி பள்லியின் புதிய இயக்குனராக விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்று வந்த குரூப் கேப்டன் ஜி எஸ் வொக்ரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். விமானப்படையில் குரூப் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்று வந்த இவர் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ,  பள்ளிகளின் தரத்தை பன்மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசி மற்றும் இராணுவத்தின் கீழ் உள்ள பள்ளிகளின் ஆலோசகராகவும் , கனடா மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கல்வி தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஊத்துக்குளி பகுதியில் உள்ள இந்த பள்ளியை தேர்ந்தெடுத்து பொறுப்பேற்றுக் கொண்டதற்கான காரணமாக நகரப் பகுதிகளில் மாணவர்களுக்கு பல்வேறு விவரங்களை தெரிவிக்க நபர்கள் இருப்பதாகவும் ,  ஆனால் ஊரக மற்றும் கிராமப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தேவையான அறிவையும் ஆற்றலையும் வழங்குவதற்காக இப்பள்ளியை தேர்ந்தெடுத்து பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்துவது எனது முதல் பணி எனவும் அதற்கேற்ற வகையில் விரிவான வகுப்பறை ஆய்வுக்கூடம் கணினி கூடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் எதிர்காலத்துக்கு தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை கற்றுத் தர இருப்பதாகவும் தெரிவித்தார். கல்வி மட்டுமல்லாது ஒழுக்கமும் சமூகத்தில் நற்பெயரை ஏற்படுத்த கூடும் என்பதை மாணவர்கள் மத்தியில் ஆழமாக போதிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இராணுவத்தில் சேர்வது குறித்த ஆர்வத்தை அவர்களுக்கு ஏற்படுத்த போவதாகவும் அதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களால் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். கல்வி ஒழுக்கம் ஆகியவற்றை முறைப்படுத்தி சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகனாக மாணவர்களை உருவாக்குவதில் முன்னெடுப்போடு பணியாற்ற இருப்பதாகவும் உலகத் தரத்தில் பள்ளியை உயர்த்தி மாணவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News