திருப்பூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி
திருப்பூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது.
தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி. திருப்பூர்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருப்பூர் எஸ்.வி.காலனி, மங்கலம் சின்னவர்தோட்டம் ஆகிய இடங்களில் பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி நடந்தது. எஸ்.வி.காலனியில் நடந்த பயிற்சியில் மாவட்ட செயலாளர்கள் ஹனிபா, காஜா பாய், தொண்டரணி சித்திக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயளாலர் முஹம்மது ஒலி, பேச்சாளர் பா அப்துர் ரஹ்மான் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
மங்கலம் சின்னவர் தோட்டத்தில் நடந்த முகாமில் திருப்பூர் மாவட்ட தலைவர் நூர்தீன், செயலாளர் யாசர், பொருளாளர் சிராஜ், பேச்சாளர் மங்கலம் சலீம் ஆகியோர் பேசினர். இதில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
நீண்ட நாட்கள் சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.