அம்மன் திருக்கோவிலில் வார வழிபாடு
திண்டுக்கல் மலைக்கோட்டையில் அமைத்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-01-13 09:19 GMT
திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை வார வழிபாட்டினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. மேலும் அதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.